Sunday, January 31, 2010

உங்களின் பிளாக்குகளை அழகாக்குவது எப்படி ?!

0 comments
தற்போதைய நிலையில் பிளாக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கதை, கவிதை, கட்டுரைகள், சினிமா என தனது சொந்த கருத்துக்களை இடும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது.



பிளாக் எழுத என்று வருபவர்கள் தொழில்நுடபம் சார்ந்தவர்கள் என்று அல்லாமல் எழுத்துப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் எழுத்துத் திறமையை பிளாக்கில் எழுதி காட்டுகிறார்கள். இவர்களால் எழுதப்படும் கட்டுரைகள், கருத்துக்கள் வியக்கத் தகும் வகையிலும், அரிய கருத்துக்களையும் தாங்கி வந்தாலும் அவர்களின் தொழில்நுட்ப அறியாமையினால் அவர்களது வலைப்பக்கங்கள் மிகச் சாதாரணமாகவும், சரியாக பண்படுத்ததல் இல்லாமலும் காணப்படுகின்றது.

இந்த கட்டுரை எளிய வகையில் தமது பிளாக்குகளை எவ்வாறு அழகாக்கலாம் என்பதை விவரிக்க உள்ளது. பிளாக்குகளை அழகாக்க தேவைப்படுபவைகளை, செயல்முறைகளையும் இங்கே காண்போம்.

1. டெம்ப்ளேட் என்னும் அடைப்பலகைகள்.

ஒவ்வொரு பிளாக்கிற்கும் உள்ள அழகே அதன் டெம்ப்ளேட்டுக்கள் தான். டெம்ப்ளேட்டுக்கள் தான் ஒருவரது பிளாக்கின் முதல் தோற்றத்தை தீர்மானிக்கிறது. அத்துடன் இடப்பட்டுள்ள கட்டுரைகளையும், சுட்டிகளையும் மிக அழகாக அடுக்கி வைப்பதற்கு டெம்ப்ளேட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பிளாக்கர் நிறுவனம் பிளாக் உருவாக்கும் ஒவ்வொருக்கும் என தனது தளத்தில் சில டெம்ப்ளேட்டுகளை அளிக்கிறது. இவை முறையே Minima, Denim, Rounder, Herbert, Harbor, Scribe, Dots, thisaway என்பன உள்ளன. பிளாக் உருவாக்கும் ஒவ்வொருவரும் இவற்றில் எதாவது ஒன்றை தேர்வு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு அழகான டெம்ப்ளேட்டை மாற்றிக் கொள்ளலாம் என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருப்பதில்லை. அவற்றை எங்கே காண்பது? எவ்வாறு மாற்றுவது என்பதை அறியலாம்.

இணையங்களில் கிடைக்கும் இலவச பிளாக்கர் டெம்ப்ளேட்டுக்களை தேட கூகிள் தளத்திற்குச் சென்று "Free Blogger Template downlod" எனத் தேடினால் எண்ணற்ற தளங்களின் முகவரிகள் கிடைக்கும்.



பிளாக்கர் டெம்ப்ளேட்டுக்களை பட்டியலிடுவதற்கு என்றே பல தளங்கள் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக நான் அடிக்கடி சென்று புதிய டெம்ப்ளேட்டுக்களை கவனிக்கும் கீழ்க்கண்ட தளங்களில் சென்றும் காணுங்கள்.

http://www.bloggerstyles.com/
http://btemplates.com/

இத்தளங்களில் பிளாக்கர் டெம்ப்ளேட்டுக்கள் வெவ்வேறு வகைகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு, மூன்று பத்திகளைக் கொண்ட டெம்ப்ளேட்டுக்கள், சிவப்பு, பச்சை, ஊதா நிற டெம்ப்ளேட்டுக்கள், தனிநபர், நிறுவன, நிழற்பட உபயோகமுள்ள டெம்ப்ளேட்டுக்கள் என பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேவையானவற்றை தேர்வு செய்து உங்களுக்கு மாதிரி(Demo) மற்றும் தரவிறக்கச் சுட்டிகள் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்த்து கவனித்து உறுதிசெய்து விட்டு அதன் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கோப்பானது பெரும்பாலும் .xml உடையதாய் இருக்கும்.

புதிதாக டெம்ப்ளேட் மாற்றம் செய்கையில் ஏற்கனவே உள்ள டெம்ப்ளேட்டை சேமித்து வைத்துக் கொள்வது மிக அவசியம். ஆதலால் Download Full Template சுட்டியை சொடுக்கி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை நமது பிளாக்கில் எவ்வாறு உள்ளீடு செய்வது எனப் பார்ப்போம். உங்களுடைய பிளாக்கர் டேஷ்போர்டில் Layout >> Edit HTML சென்று Browse பட்டனை சொடுக்கி தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை தேர்வு செய்து Upload பட்டனைச் சொடுக்குங்கள். டெம்ப்ளேட் மாற்றம் செய்யப்பட்டமையால் ஏற்பட்ட மாற்றங்களைச் சரிசெய்ய Confirm & Save ஐ சொடுக்கி ஏற்றுக் கொள்ளுங்கள்.

தற்போது நீங்கள் மாதிரியில் பார்த்தே அதே அழகில் உங்கள் பிளாக் தோற்றமளிப்பதை கவனிப்பீர்கள். தேவையான மாற்றங்களை செய்து மேலும் அழகாக்க முயற்சி செய்யுங்கள்.

2. நேவிகேஷன் பார்.

பிளாக்கர் தளங்களில் காணப்படும் மற்றுமொரு கருவியானது நேவிகேஷன் பார் எனப்படுவது. இதன் மூலம் பிளாக்கரில் உட்புகு செய்வதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும் இதன் தோற்றம் நமது தளத்தை மற்ற இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடும். ஆதலினால் இவற்றை நீக்கி விடுவதே சாலச் சிறந்தது. இவற்றை நீக்குவது பற்றிய முறையை முந்தைய பதிவில் காணுங்கள்.



http://www.mentamil.com/2009/10/blog-post_7859.html

3. என்னைப் பற்றி

உங்களது பிளாக்கில் இருக்க வேண்டிய முக்கியமான கேட்ஜட் “என்னைப் பற்றி” (About me) எனப்படுவது. உங்கள் தளங்களில் வாசிக்க வரும் நபர்கள் இத்தளத்தின் ஆசிரியர் யார் என்பதை அறிய ஆவலுடன் இருப்பார்கள். அத்துடன் உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் வரிகள் உங்களின் பெயரை அவரது நினைவுகளில் நிலைநிறுத்துவதற்கும், மறுபடியும் உங்கள் தளத்தைக் காண வருவதற்கும் ஏதுவாய் அது அமையும். உங்கள் தளத்தின் வலது அல்லது இடது பக்கதில் இந்த கேட்ஜெட்டை வைக்கலாம் அல்லது தளத்தில் மெனு இருப்பின் அவற்றில் ”என்னைப் பற்றி” எனச் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் தொடர் அல்ல்து தொகுப்புகள் வெளியிட்டிருப்பின் அவற்றின் சுட்டியை என்னைப் பற்றி பகுதியில் இணைக்கலாம்.

4. தலைப்புப் படம்

உங்களின் பிளாக்குகளில் தலைப்புப் படம் மிக முக்கியமானதாகும். தரவிறக்கம் செய்யப்பட்ட டெம்ப்ளேட்டுக்களில் உள்ள படங்களை அப்படியே வைத்திருக்காமல் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து அந்தப் படத்திற்கு பதிலாக உங்களால் வடிவமைக்கப்பட்ட படத்தை இடலாம். டேஷ்போர்டில் உள்ள Layout >> Page element சென்று தலைப்புக்கான படத்தை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில் படம் இருக்கும் சுட்டியை Layout >> Edit HTML பக்கம் சென்று Edit Template கட்டத்தில் தேடி தலைப்புப் படம் அமைந்துள்ள சுட்டிக்கு பதில் உங்களால் வடிவமைக்கப்பட்ட படத்தின் சுட்டியை ஏற்றி தலைப்புப் படத்தை மாற்றிக் கொள்ளலாம். இதற்கான விளக்கங்கள் தரவிறக்கம் செய்யப்பட்ட டெம்ப்ளேட்டின் விளக்கப் பகுதியிலும் காணலாம்.

5. அண்மைய பதிவுகள்.


உங்களின் வலைப்பக்கத்தில் அண்மைய பதிவுகள் கேட்ஜட் மிக முக்கியமானதும் வாசகர்களை தளத்தில் உலவ விடும் அரிய கருவியாகும். வெவ்வேறான தேடலில் உங்களின் தளத்திற்கு வருவோர் உங்களால் பதியப்பட்ட மற்ற பதிவுகளையும் காண இந்த் கேட்ஜட் பெரும் உதவு புரிகிறது. அண்மைய அல்லது சமீபத்திய பதிவுகள் என இணைத்துக் கொள்ள Dashboard >> Layout >> Page Element சென்று Add Gadget ஐ சொடுக்கி அதில் Feed எனும் கேட்ஜெட்டைத் தேர்வு செய்யுங்கள். Feed கேட்ஜட்டுக்கான சுட்டியில் http://yourblogname.blogspot.com/feeds/posts/default என்னும் முகவரியை கொடுக்க உங்களால் பதிவிடப்பட்ட பதிவுகளைப் பட்டியலிடும். Save பட்டனை சொடுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். ( குறிப்பு: கொடுக்கப்பட சுட்டியில் yourblogname என்பதற்கு பதிலாக உங்கள் பிளாக் முகவரியை அளிக்கவும்.

6. அண்மைய மறுமொழிகள்

பிளாக் எழுதும் கலைஞருக்கு, எழுத்தாளனுக்கு கிடைக்கும் வருமானம் என்பது மறுமொழிகளாய் வாசகர்கள் எழுதும் பாராட்டும், விவாதங்கள் தான். ஆதலாலினால் அண்மையில் மறுமொழி எழுதியவற்றை பக்கவாட்டில் வெளியிட மேற்குறிப்பிட்ட "Feed" கேட்ஜட்டை தேர்வு செய்து http://yourblogname.blogspot.com/feeds/comments/default எனும் முகவரியை இடுங்கள்.பின் Save ஐ சொடுக்கி இணைத்துக் கொள்ளுங்கள்.

7. வகைகள் (அ) லேபிள்கள்
நாம் பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவுகளையும் வகைப்படுத்தி தேவையெனில் வகைக்கேற்றாற்போல் அடுக்கிக் காண்பதில் லேபிள்கள் பெரும்பங்காற்றுகின்றன. நமது பதிவின் வகைக்கேற்ப அவற்றை இடம், பொருள், பெயர் என வகைப்படுத்தி விட வேண்டும். வகைப்படுத்ததிலின் மூலம் நமக்கு அவற்றைப் பட்டியலிட சுட்டிகள் கிடைக்கும். உதாரணமாக கவிதைகள் அனைத்திற்கும் கவிதைகள் என வகைப்படுத்தலின் மூலம் பக்கவாட்டில் ஒரு சுட்டியை இணைத்து அவற்றை கவிதைக்கான சுட்டியையும், மெனுக்களில் கதைகள் என இட்டு அவற்றை கதைகளுக்கான சுட்டியினையும் இணைத்து பிளாக்குகளை பண்படுத்துதல் முடியும். பதிவுகளை படிக்கும் போது லேபிள்களைச் சுட்டி வெவ்வேறு வகைகளை பட்டியலிட்டுப் படிக்க முடியும்.

8.பார்வையாளர்கள் விபரம்

உங்களின் தளத்தினைப் பார்க்கும் பார்வையாளர்களின் விபரங்கள், தினமும் வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை, எந்தெந்த நாட்டு வருகையாளர்கள், எத்தனை பக்கங்கள் சொடுக்கப்பட்டது, தற்போதுள்ள பார்வையாளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை துல்லியமாய் வெளியிட எண்ணற்ற தளங்கள் இலவசமாய் செயல்பட்டு வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தி தேவையான நிரல்களைப் பெற்று உங்கள் தளத்தின் பக்கவாட்டில் HTML/Java Script கேட்ஜெட் மூலம் இணைத்து உங்களின் பிளாக்குகளை அழகாக்கலாம்.

http://www.neoworx.net/
http://www.histats.com/







9. தோழமைப் பூக்கள்


உங்களின் பிற வலைப்பக்கங்கள், நண்பர்களின் வலைப்பக்கங்கள், பிடித்த வலைப்பக்கங்கள் போன்ற ஒரு பட்டியலை நிறுவலாம். நீங்கள் பட்டியலிடும் நண்பர்களின் வலைப்பக்கஙகளிலும் உங்கள் தள முகவரியை நிறுவிட அறிவுறுத்தலாம். இவை உங்களுக்கு மென்மேலும் வருகைகள் வர உதவியாய் இருக்கும்.

10. ரசிகர்கள் (அ) ஃபாலோவர்கள்

உங்களுக்கான ரசிகர்கள் அல்லது உங்களது ஃபாலோவர்கள் என்கிற வகையில் உங்களின் பதிவுகளைத் தொடரும் நண்பர்களுக்கென இந்த கேட்ஜட் மிகவும் பயனுள்ளது. உங்களின் பதிவுகள் உடனுக்குடன் அவர்களுக்கு இதன் மூலம் தெரியப்படுத்தப்படும். மேலும் உங்களின் ரசிகர்களாக வாசகர்கள் இணைவது என்பது நீங்கள் பெருமைப்படக்கூடிய விஷயமும் கூட.

மேற்கூறியவைகள் அனைத்தும் உங்களின் பிளாக்குகளை அழகாக்க்க மிகவும் உறுதுணையாய் அமையும் என நம்புகிறேன். இவற்றில் ஏற்படும் ஐயங்கள் பற்றி எனது மறுமொழியில் தெரிவியுங்கள்.


Advertisement

தமிழ் நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ் நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ் நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம்

Followers

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com